பயிர் பாதுகாப்பு கருவிகள் :: தெளிப்பு முனையின் வகைகள்

தெளிப்பு முனைகளின் வகைகள்
தெளிப்புமுனை
நான்கு முக்கியமான செயல்பாடுகளைக் கொண்டது

  • திரவத்தை சிறு சிறு துளிகளாக மாற்றுகிறது.
  • குறிப்பிட்ட அளவில் திரவத்தை தெளிக்கிறது.
  • நீரியல் செயல்பாட்டினை கொடுக்கிறது.
  • தெளிப்பான்களில் மிகவும் முக்கியமான பகுதி தெளிப்புமுனையாகும்.

மாற்றியமைக்க தெளிப்பு முனை

  • தெளிப்பவரால் அனுக முடியாத இடத்தில் தெளிப்பதற்கு உகந்தவை.
  • தெளிப்புமுனையின் கோணத்திற்கு ஏற்ப வெற்று கூம்பினுள் திரவம் வெளியேறுகிறது.

இரட்டை சுழற்சி தெளிப்புமுனை

  • வேறு வேறு திசையில் ஒரே நேரத்தில் தெளிப்பதற்கு இந்த  வகை உதவுகிறது.
  • அதிகப்படியான தெளிப்பு திரவத்தை உபயோகப்படுத்த இதனைப் பயன்படுத்தலாம் .

தெளிப்பு முனையை தேர்வு செய்தல்

  • தகுந்த தெளிப்பு முனையை தேர்வு செய்வதே சரியான பூச்சிக்கொல்லி தெளிப்பை உறுதி செய்யும்.
  • தெளிப்பு முனைதான், குறிப்பிட்ட பரப்பளவிற்கு தேவையான தெளிப்புத்திரவத்தை சீராக காற்றில் பரவாமல் தெளிப்பதற்கு உதவுகிறது.
  • தெளிப்புமுனைகள் பித்தளை, துருப்பிக்காத இரும்பு மற்றும் பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆனவையாகும்.
  • இரும்பினால் ஆன முனைகளே அதிகம்  பயன்படுத்தப்படுகிறது.  ஆனால் பிளாஸ்டிக்கினால் ஆன தெளிப்பு முனைகளை எளிதில் மாற்றிக்கொள்ளவும், உதிரிபாகங்களும் எளிதில் கிடைக்கின்றன.
தெளிப்பு முனைகளின் வகைகள்
Flat fan nozzlesFlat fan nozzles Floodjet nozzles Single swivel nozzles Double swivel nozzles Spray guns
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016